/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொடுத்த பணத்தை கேட்டவரை தாக்கிய தம்பதி மீது வழக்கு
/
கொடுத்த பணத்தை கேட்டவரை தாக்கிய தம்பதி மீது வழக்கு
கொடுத்த பணத்தை கேட்டவரை தாக்கிய தம்பதி மீது வழக்கு
கொடுத்த பணத்தை கேட்டவரை தாக்கிய தம்பதி மீது வழக்கு
ADDED : டிச 27, 2024 06:00 AM
திருக்கனுார்: லிங்காரெட்டிப்பாளையத்தில் பணத்தை திரும்ப கேட்டவரை, தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பூமிநாதன், 41. கூலி தொழிலாளி. இவர், அதே கிராமத்தை சேர்ந்த கங்கா (எ) ஜோதி என்பவருடன் இணைந்து, ஒரு மனை வாங்க முடிவு செய்தார். அதன்படி, மனையின் மொத்த விலையான ரூ. 12 லட்சத்தில், ரூ.6 லட்சத்தை பூமிநாதன், கங்காவிடம் கொடுத்தார்.
மேலும், பத்திர பதிவின்போது ரூ.30 ஆயிரம் வழங்கினார்.
ஆனால், கங்கா அந்த மனையை தனது மகன் பெயரில் பதிவு செய்து கொண்டார். இதையடுத்து, பூமிநாதன் மனை வாங்க தான் கொடுத்த பணத்தை, திரும்ப கேட்டபோது, ரூ. 3 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு, மீதி பணம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுக்கவில்லை.
நேற்று முன்தினம் மீதி பணத்தை கேட்க பூமிநாதன், கங்கா வீட்டிற்கு சென்று கேட்டபோது, அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கங்கா, அவரது கணவர் முருகன் ஆகியோர் இணைந்து, பூமிநாதனை தகாத வார்த்தைகளால் திட்டி, துடப்பத்தால் தாக்கினர்.
இதுகுறித்து பூமிநாதன் அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் கங்கா, அவரது கணவர் முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

