/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லைசன்ஸ் பெற போலி ஆவணம் தம்பதி மீது வழக்கு
/
லைசன்ஸ் பெற போலி ஆவணம் தம்பதி மீது வழக்கு
ADDED : ஜன 07, 2025 05:55 AM
காரைக்கால்: லேத்பட்டறைக்கு உரிமம் பெற போலி ஆவணம் சமர்ப்பித்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி நிர்மலா. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் லேத்பட்டறை நடத்த அதே பகுதியை சேர்ந்த வீரண்ணா மனைவி வரலட்சுமி என்பவருக்கு வாடகை விட்டிருந்தார். இந்த வாடகை ஒப்பந்தம் முடிந்த நிலையில், நிர்மலா இடத்தை காலி செய்து தருமாறு வரலட்சுமியிடம் கூறினார்.
இந்நிலையில் வரலட்சுமி, லேத் பட்டறைக்கு திருப்பட்டிணம் கொம்யூன் பஞ்சாயத்தில் லைசன்ஸ் வாங்க, போலியாக வாடகை ஒப்பந்த பத்திரத்தை தயாரித்து ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
இதனையறித்த நிர்மலா நேற்று முன்தினம் திருப்பட்டிணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வரலட்சுமி, அவரது கணவர் வீரண்ணா ஆகியோர் மீது போலி ஆவணம் தயாரித்து, அரசை ஏமாற்ற முயற்சித்த பிரிவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

