/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் இன்ஜினியருக்கு தொல்லை கடலுார் வாலிபர் மீது வழக்கு
/
பெண் இன்ஜினியருக்கு தொல்லை கடலுார் வாலிபர் மீது வழக்கு
பெண் இன்ஜினியருக்கு தொல்லை கடலுார் வாலிபர் மீது வழக்கு
பெண் இன்ஜினியருக்கு தொல்லை கடலுார் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2025 05:32 AM
புதுச்சேரி: பெண் அரசு உதவி பொறியாளரை மொபைலில் தொடர்பு கொண்டு, தொல்லை கொடுத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை, புவன்கரே வீதியை சேர்ந்தவர் தேவிஸ்ரீ, 25; பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளராக உள்ளார்.
அரசு வேலை கிடைப்பதற்கு முன், தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, அங்கு பணியாற்றிய கடலுாரை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன், தொழில் ரீதியாக பேசியுள்ளார்.
இந்நிலையில், தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ள தேவிஸ்ரீயை, விக்னேஷ் அடிக்கடி மொபைலில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து தேவிஸ்ரீ அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் விக்னேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.