/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : ஆக 30, 2025 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனைவியை தாக்கி விட்டு, நகை, பணம் எடுத்து சென்ற கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
புதுச்சேரி ஜவகர் நகரை சேர்ந்தவர் சரவணன், 43. இவர், வேலைக்கு செல்லாமல் இருந்ததால், கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது.
இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் இருந்ததை இவரது மனைவி, சவுமியா கணவனிடம் கடந்த 24ம் தேதி, கேட்டபோது, மது குடித்து விட்டு வந்து தனது மனைவியை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து, அவரது மனைவி, தனது கணவர் என்னை தாக்கி விட்டு, வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்து சென்றுள்ளார் என, ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.