/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
/
கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
ADDED : மார் 04, 2024 05:37 AM
புதுச்சேரி : வரதட்சணை தரவில்லை என காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி பெண்ணை தாக்கி கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, ராசாக்குப்பம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன்.
இவரது மகள் பிரதிஷா, 20; கடலுார் ஐ.டி.ஐ.யில் 2ம் ஆண்டு படித்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டிலிருந்து வெளியேறி ரெட்டியார்பாளையம், லாம்பார்ட் சரவணன் நகரைச் சேர்ந்த வேல்முருகன், 23; என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
புதுச்சேரி வந்த பெற்றோர் அழைத்தும், பிரதிஷா செல்லவில்லை.
மூன்று மாதம் கழித்து தாய் மச்சகாந்தியை தொடர்பு கொண்ட பிரதிஷா, வரதட்சணை தரவில்லை என கணவர் வேல்முருகன் அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த 27 ம் தேதி உடலில் காயங்களுடன் குறிஞ்சிபாடி அரசு மருத்துவமனையில் 6 மாத கர்ப்பிணியான பிரதிஷா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 2 லட்சம் வரதட்சணை, பைக், உள்ளிட்ட பொருட்களை வாங்கிதரவில்லை என கூறி கஞ்சா போதையில் அடித்து உடைத்தாகவும், சிறிய கத்தியால் தோல் பட்டை, கையில் குத்தியதுடன், அறையில் வைத்து வெளிப்பக்கமாக பூட்டி சென்றதாக ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

