/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு
/
மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு
ADDED : நவ 11, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி உப்பளம் சோனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மா, 33; இவரதுமனைவி தமிழ்செல்வி,29;. தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடற்கரை காந்தி சிலை அருகில் பொம்மை கடை நடத்தி வரும் தமிழ்செல்வியை, நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த தர்மா, கடையில் இருந்த மனைவி தமிழ்செல்வியை ஆபாசமாக பேசி, உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

