/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் அரசு கல்லுாரியில் வழிகாட்டுதல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
தாகூர் அரசு கல்லுாரியில் வழிகாட்டுதல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தாகூர் அரசு கல்லுாரியில் வழிகாட்டுதல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தாகூர் அரசு கல்லுாரியில் வழிகாட்டுதல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : நவ 11, 2025 06:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கணித துறைத் தலைவர் தாமோதரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கருப்புசாமி தலைமை தாங்கி பேசுகையில்''மாணவர்கள் வகுப்பு மேலாண்மையை கடைபிடிப்பது, ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்துவது, மற்றும் மாணவர்களுக்கான ஒழுக்க நெறிகள் குறித்து பேசினார். துணை முதல்வர் ராஜேஷ்குமார் நோக்கவுரையாற்றினார். துறைத் தலைவர்கள் ரேவதி, பார்த்தசாரதி, ராமகிருஷ்ணன், அத்துல்யா பாய், வேலுராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினார். கல்லுாரி முதல்வர் கருப்புசாமி பேசுகையில்''வரலாற்றுத் துறை மாணவர் ரவிச்சந்திரன், சுற்றுலா பயண மேலாண்மைத்துறை மாணவி சாக்ஷி, தமிழ்த் துறை மாணவி ஓவியா, உளவியல் துறை மாணவி சுப்புலட்சுமி, தாவரவியல் துறை மாணவி தெய்வானை, கணிதத்துறை மாணவி செல்வி அக்ஷய்லட்சுமி ஆகியோர் பின்னுாட்ட கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
தமிழ்த் துறைப் பேராசிரியர் கண்ணன் தொகுப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், ஒவ்வொரு வகுப்பின் பிரதிநிதிகளும், துறை மாணவர் பேரவையின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராம் பிரபு, முனைவர்கள் வேலுராஜ், வெங்கடசாமி, நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழ்த்துறை மூன்றாம் ஆண்டு மாணவர் தேவநாதன் நன்றி கூறினார்.

