தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியை தாக்கிய கணவர்  மீது வழக்கு

 மனைவியை தாக்கிய கணவர்  மீது வழக்கு

 மனைவியை தாக்கிய கணவர்  மீது வழக்கு


ADDED : பிப் 23, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: இரண்டாவது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட முதல் மனைவியை தாக்கிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கருவடிக்குப்பம், பாரதி நகரை சேர்ந்தவர் முகமதுபீ. இவர், கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் தையல் கடை நடத்தி வந்தார்.

அப்போது கணுவாபேட்டையை சேர்ந்த புகழ் (எ) திருவன்மேனி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இரு வீட்டார் எதிர்ப்புகளை மீறி கடந்த 2018ம் ஆண்டு மைலம் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த 1ம் தேதி புகழ், வில்லியனுார் மூர்த்தி நகரை சேர்ந்த பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, கணுவாப்பேட்டையில் தங்கினர்.

இதணையறிந்த முகமதுபீ, கணுவாபேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று, புகழ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து கேட்டார்.

அப்போது கணவர், மாமியர், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து முகம்மதுபீயை, ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து முகமதுபீ புகாரின் பேரில், புகழ் மற்றும் மாமியார் செல்வி, மைத்துனர் தென்னரசு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us