ADDED : ஆக 26, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூரில் மனைவி, மாமியாரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூரை சேர்ந்தவர் அருண்சுர்ஜித். இவரது மனைவி சங்கீதா, 33; இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கணவரிடமிருந்து பிரிந்த சங்கீதா, சோரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்தபடி, எம்.பி.ஏ., படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சங்கீதா வீட்டிற்குச் சென்ற அருண்சுர்ஜித், ‘என் மீது நீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறாயா’ என, கேட்டு சங்கீதாவை தாக்கி உள்ளார். தடுக்க வந்த மாமியாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சங்கீதா அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து அருண்சுர்ஜித்தை தேடி வருகின்றனர்.
