ADDED : ஜூலை 13, 2026 02:27 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, லெபர்துனால் வீதியை சேர்ந்தவர் மெர்லின் கொர்வெல்.இவரது கணவர் பத்மநாபன். இவர்களின் விவாகரத்து வழக்குகோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்தனது, வீட்டின் கீழ் பகுதியில் வசிப்பதுடன், மாடியை கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு விடுதி நடத்த வாடகைக்கு விட்டார்.
கடந்த நவ., 11ம் தேதிபத்மநாபன், மெர்லின் கொர்வெல் வீட்டிற்கு வந்து தகராறுசெய்து, மாடி விடுதி அறைகளின் பூட்டை உடைத்தார்.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்க புதுச்சேரி நீதிமன்றத்தில் மெர்லின் கொர்வெல் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு பதியு ஒதியஞ்சாலை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பத்மநாபன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
