கருத்து கேட்பு கூட்டத்தில் ரகளை செய்தவர் மீது வழக்கு
கருத்து கேட்பு கூட்டத்தில் ரகளை செய்தவர் மீது வழக்கு
ADDED : நவ 26, 2026 04:48 PM
காரைக்கால்: காரைக்காலில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் நிரவி அம்மாள்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (நவ.,25) கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
இதில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.அப்போது கூட்டத்தில் குடிபோதை ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக பேசியுள்ளார்.பொதுமக்களை இடையூறு ஏற்படுத்திய நபரை பாதுகாப்புப் பணியில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் விருதுநகர் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 47; என தெரியவந்தது. என்பது தெரியவந்தது.
இவர் மீது நிரவி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
