தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வளர்ப்பு நாயை அடித்து கொன்றவர் மீது வழக்கு

வளர்ப்பு நாயை அடித்து கொன்றவர் மீது வழக்கு

வளர்ப்பு நாயை அடித்து கொன்றவர் மீது வழக்கு


UPDATED : நவ 26, 2026 04:42 PM

ADDED : நவ 26, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 04:42 PM ADDED : நவ 26, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் வளர்ப்பு நாயை கட்டையால் அடித்துக்கொன்ற நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காரைக்கால் வள்ளலார் நகரை சேர்ந்த ஞானவேல் கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாளுடன் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.வீட்டின் கீழ்தளத்தில் குடியிருந்த நபர்கள் அவர்கள் வளர்த்த வெள்ளை நிற பெண் நாயை விட்டு சென்றனர்.

இதையடுத்து ஞானவேல் நாய்க்கு உணவு வழங்கி பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த நாய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றில் இரண்டு ஆண் குட்டிகளும், இரண்டு பெண் குட்டிகளும் இருந்தன.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி ஞானவேலும் அவரது மனைவியும் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது பெண் நாய் தலையில் காயமடைந்து இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அருகில் உள்ளவர்களை விசாரித்தபோது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்ததாகவும், அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்தியாகு, 30; என்பவர் கட்டையால் நாயின் தலையில் தாக்கியது தெரியவந்தது.

புகாரின் பேரில் நகர போலீசார் சந்தியாகு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us