ADDED : ஏப் 16, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: திப்புராயப்பேட்டை, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் ஹேமலதா, 20; பாரதிதாசன் கல்லுாரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், வீட்டின் வாசலில் இரவு டிபன் கடை நடத்தி வரும் தனது சித்தி நந்தினிக்கு உதவியாக இருந்து வந்தார்.
கடந்த 6ம் தேதி சித்தியின் டிபன் கடையில் ஹேமலதா உதவியாக இருந்தபோது, அங்கு குடிபோதையில் வந்த அதேப்பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர், டிபன் சரி இல்லை எனக் கூறி, நந்தினி மற்றும் ஹேமலதாவை தகாத வார்த்தைகளால் திட்டினார். காயமடைந்த ஹேமலதா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சூர்யா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
