/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்டிக்கடை சேதம் ஒருவர் மீது வழக்கு
/
பெட்டிக்கடை சேதம் ஒருவர் மீது வழக்கு
ADDED : ஜன 04, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால், நிரவி விழிதியூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரவி. இவர் அப்பகுதியில் உள்ள சாராயக்கடை அருகில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் அதேப்பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் கடைக்கு வந்து 100 ரூபாய் கடன் கேட்டார்.
இதற்கு ரவி பணம் தர முடியாது என, கூறினார். ஆத்திரமடைந்த தினேஷ், அவரை ஆபாசமாக திட்டி, கடையில் உள்ள கடலை மிட்டாய், பிஸ்கெட் வைத்திருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்தார்.
இதுக்குறித்த புகாரின் பேரில், தினேஷ் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

