/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வார்டனை மிரட்டிய கைதி மீது வழக்கு
/
வார்டனை மிரட்டிய கைதி மீது வழக்கு
ADDED : ஜன 04, 2026 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வார்டனை மிரட்டிய கைதி மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காலாப்பட்டில் மத்திய சிறையில், விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என 200 பேருக்கு மேற்பட்டோர் உள்ளனர்.
இந்நிலையில், விசாரணை கைதியான பரத்,26; தடை செய்யப்பட்ட போதை பொருளான ஹான்ஸ் பயன்படுத்தினார்.
அதனை வார்டன் பறிமுதல் செய்ய முயன்றார். ஆத்திரமடைந்த பரத், வார்டனை ஆபாசமாக திட்டி, மிரட்டினார்.
இதுகுறித்து, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

