ADDED : பிப் 13, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த பொதுப்பணித் துறை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறைமலை அடிகள் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதல்வர் ரங்கசாமியை முற்றுகையிட முயன்ற சிலரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்குப் பதிந்தார். இதில், போராட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
