sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மனசாட்சி இல்லாமல் பேசக்கூடாது ஆளும் கட்சி - எதிர்கட்சிகள் மோதல்

/

 மனசாட்சி இல்லாமல் பேசக்கூடாது ஆளும் கட்சி - எதிர்கட்சிகள் மோதல்

 மனசாட்சி இல்லாமல் பேசக்கூடாது ஆளும் கட்சி - எதிர்கட்சிகள் மோதல்

 மனசாட்சி இல்லாமல் பேசக்கூடாது ஆளும் கட்சி - எதிர்கட்சிகள் மோதல்


ADDED : பிப் 13, 2026 05:51 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சட்டசபையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசியதாவது:

புதுச்சேரி மாநிலத்திற்கான மிகப்பெரிய மாற்றத்தை இந்த அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 2016ம் ஆண்டில் காங்.,-தி.மு.க., அரசில் செய்ய முடியாதவற்றை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்துள்ளது.

இலவச அரிசி, இலவச கோதுமை என, அடுக்கி கொண்டே போகலாம். இது டபுள் இன்ஜின் சர்க்கார் தான். அதை யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையவில்லை என்று மனசாட்சி இல்லாத எதிர்கட்சியினர் சொல்கின்றனர். தொகுதியில் மேம்பாட்டு நிதி இல்லாமல், பொதுப்பணி துறை மூலமாக ஒட்டு மொத்தமாக ரூ. 400 கோடி வரை வேலை நடக்கின்றது. இந்த தரவுகள் என்னிடம் உள்ளது. எதிர்கட்சிகள் மனசாட்சி இல்லாமல் பேசக்கூடாது. ஆளும் கட்சியைவிட, எதிர்கட்சிகள் தொகுதியில் பலனடைந்துள்ளனர்.

வைத்தியநாதன்: இப்படி தான் நபார்டு மூலம் தருகிறேன் என்று கூறினார்கள். ஏமாற்றி விட்டனர். இன்றைக்கும் நடந்து கொண்டு இருக்கிறேன். பொய்யான கருத்தை கூறக் கூடாது.

கல்யாணசுந்தரம்: கடந்த காங்.,-தி.மு.க., ஆட்சியில் கொடுத்த தொகையைவிட கடந்த 5 ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட தொகை அதிகம். இதை யாரும் மறுக்க முடியாது.

வைத்தியநாதன்: மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட் சியை கவர்னர் செயல்படவிடாமல் தடுத்தார். அதனால் செய்யவில்லை. உங்களுக்கு கவர்னர் செய்து கொடுக்கிறார் அவ்வளவு தான்.

அமைச்சர் நவச்சிவாயம்

வைத்தியநாதன் எம்.எல்.ஏ ., தனது தொகுதியில் எதுமே செய்யவில்லை என்று இப்படி கூற முடியுமா. குறை கூறுவது எதிர்கட்சிகள் வேலை என்றால், செய்த தை சொல்வது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வின் கடமை. முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியில் நீங்கள் இல்லை. அதனா ல் தான் உங் களுக்கு தெரியவில்லை.

வைத்தியநாதன்: எனது தொகுதியில் துணை மின் நிலையம் அமைக்க ரூ.45 கோடி ஒதுக்கினர். இதற்காக அமைச்சர் நமச்சிவாயத்திற்கு நன்றி. ஆனால், பூமி பூஜை போட விடவில்லை. இரண்டு முறை தள்ளி போய்விட்டது. இந்த பணியை உடனடி யாக துவங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us