/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளம்பெண் கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு
/
இளம்பெண் கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூன் 26, 2025 12:58 AM
பாகூர் : இளம் பெண்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் மகன் முகுந்தன் 21. இவர், கடலுார் பகுதியைச் சேர்ந்த 22 வயது உள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர்.
முகுந்தன்,அப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பழகினார்.
இதனிடையே, அப்பெண் கர்ப்பமடைந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முகுந்தனிடம் கூறி உள்ளார்.
ஆனால், முகுந்தன் திருமணத்திற்கு மறுத்து விட்டார். இது குறித்து அப்பெண் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், முகுந்தன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.