/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பீகார் தொழிலாளி தவறி விழுந்து பலி 2 பேர் மீது வழக்கு பதிவு
/
பீகார் தொழிலாளி தவறி விழுந்து பலி 2 பேர் மீது வழக்கு பதிவு
பீகார் தொழிலாளி தவறி விழுந்து பலி 2 பேர் மீது வழக்கு பதிவு
பீகார் தொழிலாளி தவறி விழுந்து பலி 2 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 27, 2025 12:19 AM
புதுச்சேரி : பீகார், சரண் கோபூர் போஸ்ட்டை சேர்ந்தவர் முகமது குதுஸ், 40; கூலி தொழிலாளி. இவருக்கு, தஸ்லிமா கத்துன் என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
முகமது குதுஸ், கடந்த 2 மாதமாக சேலம் மாவட்டைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.
கடந்த 24ம் தேதி புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கெமிகல்ஸ் கம்பெனியில் ரூபிங் சீட்டில் பழைய பொருட்கள் மாற்றும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் இருந்த தவறி விழுந்து படுகாயமடைந்தார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி, மேட்டுப்பாளையம் போலீசாசில் அளித்த புகாரில், கம்பெனியின் மேலாளர் சதீஸ்வரன், கான்ட்ராக்டர் ராஜா ஆகி யோர் மீது புகார் அளித்தார்.
அதன்பேரில், அவர்கள் இருவர் மீதும் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.