/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழக்கறிஞருக்கு மிரட்டல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
/
வழக்கறிஞருக்கு மிரட்டல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
வழக்கறிஞருக்கு மிரட்டல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
வழக்கறிஞருக்கு மிரட்டல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : நவ 06, 2024 04:43 AM
புதுச்சேரி : புதுச்சேரி மேரி உழவர்கரை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன், 34; வழக்கறிஞர். இவரது வீட்டின் அருகே கடந்த 1ம் தேதி இரவு மேரி உழவர்கரை பகுதியில் சிலர் அன்னதானம் வழங்கினர்.
அப்போது, கஞ்சா போதையில் வந்த அதேப்பகுதியை சேர்ந்த அப்பு, கிருஷ்ணா மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர், அன்னதானம் செய்து கொண்டிருந்த சரவணன் என்பவரை தாக்கி, அவரது வீட்டை சூறையாடினர்.
மேலும், அன்னதான நிகழ்விற்கு எந்தவித தொடர்பும் இல்லாத மகேஸ்வரனை, அவர்கள் மூன்று பேரும் போதையில் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.