/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு
/
வாலிபர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : பிப் 23, 2026 04:19 AM
பாகூர்: முன்விரோதத்தில், வாலிபரை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர் அடுத்த குருவிநத்தம் வானக்கார தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண், 24; பாகூரில் பரிசு பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவர், ஒரு பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன், சின்னக்கரையாம்புத்துாரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர், அருணுக்கு போன் செய்து, அதே பெண்ணை தான் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே, அருண் கடந்த ஒரு மாதத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதற்காக கடலுார் விளையாட்டு மைதானத்திற்கு சென்ற போது, அங்கு ஸ்ரீராம் மற்றும் தான் காதலித்த பெண்ணும் ஒன்றாக இருப்பதை பார்த்தார்.
அருண், அப்பெண்ணிடம் நியாயம் கேட்ட போது, ஸ்ரீராமுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கு, இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
கடந்த 15ம் தேதி அருண் கடையில் தனியாக இருந்தபோது, ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து, அருணிடம் தகராறு செய்து, தாக்கி மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.
காயமடைந்த அருண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது புகாரின் பேரில், ஸ்ரீராம் மற்றும் சின்ன கரையாம்புத்துார் பாண்டுரங்கன், இருளன்சந்தை கிஷோர், பாகூர் ஆதி ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

