/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி பத்திரம் மூலம் வங்கியில் கல்விக்கடன் பெற்று மோசடி: 5 பேர் மீது வழக்குப்பதிவு
/
போலி பத்திரம் மூலம் வங்கியில் கல்விக்கடன் பெற்று மோசடி: 5 பேர் மீது வழக்குப்பதிவு
போலி பத்திரம் மூலம் வங்கியில் கல்விக்கடன் பெற்று மோசடி: 5 பேர் மீது வழக்குப்பதிவு
போலி பத்திரம் மூலம் வங்கியில் கல்விக்கடன் பெற்று மோசடி: 5 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜூலை 20, 2025 01:51 AM
புதுச்சேரி : லாஸ்பேட்டையில் போலி பத்திரம் மூலம் வங்கியில் கல்விக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்த பாலமுத்துவேல் மகன் தியாகராஜன், கனடா நாட்டில் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஆய்வாளர் மேற்படிப்பிற்காக, இந்தியன் வங்கியில் கடந்த 2009ம் ஆண்டு 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் பெற்றார்.
கடனுக்கு, அவரது தாய் காந்திமதி பெயரில் உள்ள நேதாஜி நகர், கஸ்துாரிபாய் காந்தி வீதி, 2வது குறுக்கு தெருவில் உள்ள 4,650 சதுரடி இடத்தின் சொத்து பத்திரம் அடமானமாகவும், அவரது தந்தை பாலமுத்துவேல் உத்தரவாதமும் அளித்திருந்தார்.
தியாகராஜன் மேற்படிப்பை முடித்தபிறகு, வங்கியில் வாங்கிய கல்விக்கடனை திரும்ப செலுத்தாத காரணமாக, அடமானம் வைத்த பத்திரத்தின்படி அந்த இடத்தை ஜப்தி செய்து, ஏலம் விடும் பணியினை வங்கி நிர்வாகம் 2016ம் ஆண்டு துவங்கி அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கிடையே, சென்னையில் உள்ள மத்திய கலால் துறை, ஏலம் அறிவிக்கப்பட்ட இடம் தாங்களுக்கு சொந்தமானது என, தெரிவித்தது.
இதனால், வங்கி நிர்வாகம் அதிர்ச்சியடைந்து, காந்திமதி பெயரில் தியாகராஜன் அளித்த இடத்தின் பத்திரத்தை ஆய்வு செய்தபோது, அந்த பத்திரம் போலியானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலி பத்திரம் கொடுத்து, வங்கியில் கல்விக்கடன் பெற்ற தியாகராஜன், அவரது தந்தை பாலமுத்துவேல், தாய் காந்திமதி, அவர்களுக்கு அந்த இடத்தை விற்பனை செய்த மார்க் சுப்புராயன், மார்க் அன்பரசன் ஆகியோர் மீது இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வெங்கட சுப்ரமணியன் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் போலி பத்திரம் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.