/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தள்ளுவண்டி வியாபாரிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு
/
தள்ளுவண்டி வியாபாரிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : மார் 24, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக தள்ளு வண்டிகள் வைத்து கடை வைத்திருந்த 5 வியாபாரிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலையில், இரவு நேரங்களில் தள்ளுவண்டி கடைகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதாக, பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
நேற்று முன்தினம் இரவு மறைமலை அடிகள் சாலையில், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கிழக்கு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்ற, சாலையோரத்தில் கடைகள் வைத்திருந்த 5 வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.