/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் ரூட் வாங்கி தருவதாக ரூ. 35 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு பதிவு

ADDED : ஆக 17, 2025 03:37 AM
புதுச்சேரி: பஸ் ரூட் வாங்கி தருவதாக ரூ. 35 லட்சம் ரூபாய் மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
தவளக்குப்பத்தை சேர்ந்தவர் ஜோதி, 43. இவர் ரூட் பஸ் பர்மிட் வாங்கி தருமாறு அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்கிற குமரவேலுவை அனுகினார். இது தொடர்பாக, குமரேசன் அவரது மனைவி தாரா ஆகியோர் சேர்ந்து, 35 லட்சம் ரூபாயை, ஜோதியிடம் வாங்கியுள்ளனர். பஸ் ரூட் பர்மிட் வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தனர்.
இந்நிலையில், பஸ் ரூட் வாங்கி தரவில்லை எனில் பணத்தை தருமாறு, ஜோதி பல தடவை குமரவேலு வீட்டுக்கு சென்று கேட்டார்.
பணம் தர முடியாது யாரிடமாவது போய் சொல், என, ஜோதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஜோதி, புதுச்சேரி நீதிமன்றத்தை அனுகி வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குமரவேலு மீது வழக்குப் பதிவு செய்ய, தவளக்குப்பம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதையடுத்து, தவளக்குப்பம் போலீசார் குமரவேலு, அவரது மனைவி மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். குமரேசன் என்.ஆர். காங்., பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.