/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறைச்சி கடைக்காரரை தாக்கிய தாய், மகன்கள் மீது வழக்குப் பதிவு
/
இறைச்சி கடைக்காரரை தாக்கிய தாய், மகன்கள் மீது வழக்குப் பதிவு
இறைச்சி கடைக்காரரை தாக்கிய தாய், மகன்கள் மீது வழக்குப் பதிவு
இறைச்சி கடைக்காரரை தாக்கிய தாய், மகன்கள் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜூலை 07, 2025 01:42 AM
புதுச்சேரி: இறைச்சி கடை உரிமையாளரை தாக்கிய, தாய், மகன்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லித்தோப்பு, செயிட் அந்தவான் வீதியை சேர்ந்தவர் சண்முகம், 50; கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணரசி என்பவரும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கடையில் இருந்து சண்முகம் வீட்டிற்கு சென்றபோது, முன்விரோதம் காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், கோபமடைந்த பெண்ணரசி அவரது மகன்கள் சூசை, யுகி ஆகியோர் அத்துமீறி சண்முகம் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த இரும்பு கம்பியால் அவரது தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில், தலையில் படுகாயமடைந்த சண்முகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின், இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் அளித்த புகாரின் போலீசார் தாய், மகன்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.