/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு
/
பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஏப் 18, 2025 04:16 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை சாலையில் பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன், கடந்த 15ம் தேதி லாஸ்பேட்டை சாலையில், ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில்,பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
செயற்பொறியாளர் புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார், பேனர் வைத்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முத்தியால்பேட்டை
முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் தெரு நடைபாதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, நகராட்சியினருக்கு புகார் வந்தது.
அதையடுத்து, நகராட்சி அதிகாரி நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீ சார், பேனர் வைத்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

