ADDED : பிப் 03, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், -நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி காலை 7:00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலா, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல், மாலை 6:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

