/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து தராத பா.ஜ.,விற்கு தொகுதி தாரை வார்ப்பு: இந்திய கம்யூ., குற்றச்சாட்டு
/
மாநில அந்தஸ்து தராத பா.ஜ.,விற்கு தொகுதி தாரை வார்ப்பு: இந்திய கம்யூ., குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து தராத பா.ஜ.,விற்கு தொகுதி தாரை வார்ப்பு: இந்திய கம்யூ., குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து தராத பா.ஜ.,விற்கு தொகுதி தாரை வார்ப்பு: இந்திய கம்யூ., குற்றச்சாட்டு
ADDED : மார் 05, 2024 04:52 AM

புதுச்சேரி: மாநில அந்தஸ்து தர முடியாது என அறிவித்துள்ள பா.ஜ.,விற்கு முதல்வர் தொகுதியை தாரை வார்த்துள்ளார் என இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரி லோக்சபா தொகுதியும் சேர்த்து 40 தொகுதிகளுக்கும் சென்னையில் தி.மு.க., தலைமை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி தொகுதியை என்.ஆர்.காங்., பா.ஜ.,விற்கு ஒதுக்கிவிட்டதாக முதல்வர் கூறுகிறார்.
மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு தர முடியாது. யூனியன் பிரதேசமாகத்தான் புதுச்சேரி தொடரும் என அறிவித்த பா.ஜ.,விற்கு தொகுதியை தாரை வார்த்துள்ளார்.
புதுச்சேரிக்கு எந்தவிதமான நிதியும் அளிக்காமல, புதுச்சேரி தொகுதியில் , நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், கவர்னர் தமிழிசையும் போட்டியிட முயற்சிக்கின்றனர். இவர்களை எப்படி புதுச்சேரி மக்கள் ஆதரிப்பார்கள்.
மத்திய அரசில் நபாய் என்ற நிறுவனம் அத்தியாவசிய பொருட்களான பருப்பு, புளி, சர்க்கரை, வெங்காயம் ஆகியவற்றை கொள்முதல் செய்து மானிய விலையில் மாநிலங்களுக்கு தருகிறது. பருப்பு வகைகளுக்கு கிலோவுக்கு ரூ.15 மானியம் தருகின்றனர். இந்த நிறுவனத்தை அணுகி புதுச்சேரி ரேஷன்கடைகளை திறந்து மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை வரும் 6 ம் தேதி நடத்த உள்ளோம். முதல்வரை சந்தித்து மனுவும் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

