ADDED : ஜன 18, 2024 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் மாட்டுப்பொங்கல் விழாவை செல்வகணபதி எம்.பி., துவக்கி வைத்தார்.
லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜ., மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., விழாவினை துவக்கி வைத்தார். விழாவில் 50க்கும் மேற்பட்ட பசு மாடுகள், காளை மாடுகளுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.