/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலுார் சாலையில் சி.சி.டி.வி., கேமரா சீனியர் எஸ்.பி., இயக்கி வைப்பு
/
கடலுார் சாலையில் சி.சி.டி.வி., கேமரா சீனியர் எஸ்.பி., இயக்கி வைப்பு
கடலுார் சாலையில் சி.சி.டி.வி., கேமரா சீனியர் எஸ்.பி., இயக்கி வைப்பு
கடலுார் சாலையில் சி.சி.டி.வி., கேமரா சீனியர் எஸ்.பி., இயக்கி வைப்பு
ADDED : ஜன 09, 2026 05:33 AM

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலையில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களை, சீனியர் போக்குவரத்து எஸ்.பி., நித்யா ராதாக்கிருஷ்ணன் இயக்கி வைத்தார்.
புதுச்சேரி - கடலுார் சாலையில், விபத்துக்களை தடுக்கும் வகையில், தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின், சி.எஸ்.ஆர்., திட்ட நிதி உதவியின் கீழ், 3.90 லட்சம் ரூபாய் செலவில், பிள்ளையார்குப்பம், கன்னியக்கோயில், முள்ளோடை, பின்னாட்சிக்குப்பம், சோரியாங்குப்பம் சந்திப்பு என, 20 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது.
அதேபோல், 78 ஆயிரம் ரூபாய் செலவில், மணவெளி, சார்காசிமேடு, பிள்ளையார்குப்பம் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளது.
இதனை பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.
போக்குவரத்து எஸ்.பி., பக்தவச்சலம் வரவேற்றார். சீனியர் எஸ்.பி., நித்யா ராதாக்கிருஷ்ணன் சி.சி.டி.வி., கேமராக்களை இயக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, சப் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், இருதயநாதன், மற்றும் நிதி பங்களிப்பாளர்கள் உடனிருந்தனர்.

