/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் தேசிய அறிவியல் கண்காட்சி
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் தேசிய அறிவியல் கண்காட்சி
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் தேசிய அறிவியல் கண்காட்சி
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் தேசிய அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 09, 2026 05:41 AM

புதுச்சேரி: கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் அஸ்திரா -2026 தலைப்பில் 3 நாட்கள் நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்லூரி செயலாளர் சிவரம் ஆல்வா கலந்து கொண்டு மாணவர்கள் ஊக்குவித்து பேசினார்.
அஸ்திரா -2026 திருவிழாவில் அறிவியல் கண்காட்சி, பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 140க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 3,800க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அறிவியல் கண்காட்சி, விளையாட்டு, பேச்சு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லுாரி பொருளாளர் விமல், டிரஸ்டிகள் முகமது இலியாஸ், சிந்து, முதல்வர் மகேந்திரன், டீன் கனிமொழி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் மனிதவியல் துறை பேராசிரியர்கள் முருகன், யாரன்ஸ் மேரி, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை பேராசிரியர் அருணாகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.

