/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் விழுந்து முதியவர் காயம்; த.வெ.க., நிர்வாகி, 2 பேர் கைது
/
பேனர் விழுந்து முதியவர் காயம்; த.வெ.க., நிர்வாகி, 2 பேர் கைது
பேனர் விழுந்து முதியவர் காயம்; த.வெ.க., நிர்வாகி, 2 பேர் கைது
பேனர் விழுந்து முதியவர் காயம்; த.வெ.க., நிர்வாகி, 2 பேர் கைது
ADDED : ஜன 09, 2026 06:03 AM
அரியாங்குப்பம்: புதுச்சேரியில், பேனர் விழுந்து முதியவர் காயமடைந்ததால், விஜய் ரசிகர் மன்ற தலைவர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் தனசேகர், 64; தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு ெற்றவர். இவர், நேற்று முன்தினம், மாஞ்சாலை பகுதியில் தன் மகளை பார்க்க பைக்கில் சென்றார்.
அரியாங்குப்பம் விஜய் ரசிகர் மன்றம் சார்பில், 'ஜனநாயகன்' படத்தை வரவேற்று சாலையில், 20 அடி அளவில் வைக்கப்பட்டிருந்த பேனர், தனசேகர் மீது விழுந்ததில் படுகாயமடைந்தார்.
புகாரில், மூன்று பிரிவுகளின் கீழ், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பேனர் வைத்த அரியாங்குப்பம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் செல்வகணபதி, 26; ரசிகர்கள் கார்த்திக், 24; அருண், 19, ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், எட்டு பேரை தேடுகின்றனர்.