வி.மணவெளியில் சிமென்ட் சாலை அமைச்சர் துவக்கிவைப்பு
வி.மணவெளியில் சிமென்ட் சாலை அமைச்சர் துவக்கிவைப்பு
ADDED : நவ 05, 2026 04:17 PM

வில்லியனுார்: வி.மணவெளி கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை உள்துறை அமைச்சர் துவக்கிவைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில் ரூ.1:13 கோடி செலவில் வி.மணவெளி கிராமத்தில் உள்ள விநாயகர் கொவில் தெரு, புது கிணறு தெரு மற்றும் மந்தக்கரை தெரு உள்ளிட்ட சுமார் 635 மீட்டர் நீளத்திற்கு சிமென் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு இன்று (நவ.,5) உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் இணைந்து பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் பீனாராணி, உதவி பொறியாளர் முகமது தமீமுல் அன்சாரி, இளநிலைப் பொறியாளர் ராஜதினேஷ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
