/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 74.39 லட்சம் செலவில் சிமென்ட் சாலை பணி
/
ரூ. 74.39 லட்சம் செலவில் சிமென்ட் சாலை பணி
ADDED : ஜூலை 09, 2025 08:48 AM

திருபுவனை : சன்னியாசிகுப்பம் பிடாரிக்குப்பம் காலனியில் ரூ.74.39 லட்சம் ரூபாய் செலவில்சிமென்ட் சாலை பணியை அங்காளன் எல்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்டத்தின் சார்பில், திருபுவனை தொகுதி, சன்னியாசிக்குப்பம் பிடாரிகுப்பம் காலனியில் சேதமடைந்த சிமென்ட் சாலைகள் மற்றும் 'எல்' வடிவ வாய்க்கால்களை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர்கண்ணன், உதவி பொறியாளர் சீனிவாசராம், மண்ணாடிப்பட்டு கொம்யூன்பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் தேவேந்திரன், கிருபாகரன், பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.