தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிமென்ட் சாலைப் பணி துவக்கம்

சிமென்ட் சாலைப் பணி துவக்கம்

சிமென்ட் சாலைப் பணி துவக்கம்


ADDED : ஜூலை 15, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை : திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு காலனி குமரன் நகரில் ரூ.36.70 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கிவைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழகம் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு காலனி முத்துக்குமரன் நகர் வீதிகளுக்கு, ரூ.36.70 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. விழாவிற்கு எம்.எம்.எல்.ஏ., அங்காளன் தலைமைதாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பேட்கோ மேலாண் இயக்குனர் சிவக்குமார், செயற்பொறியாளர் பக்தவச்சலம், இளைநிலை பொறியாளர் திருவருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒப்பந்ததாரர் சாய் புவனா மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us