/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிமென்ட் சாலை பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சிமென்ட் சாலை பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 23, 2025 04:37 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை சாந்தி நகரில் ரூ.15 லட்சம் செலவில், சிமென்ட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி சார்பில், லாஸ்பேட்டை தொகுதி, சாந்தி நகர் அக்பர் வீதி கிழக்கு பகுதி மற்றும் கட்டபொம்மன் வீதியில் விடுபட்ட பகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் செலவில் சிமென்ட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உழவர்கரை நகராட்சி உதவிப்பொறியாளர் கலிவரதன், இளநிலைப் பொறியாளர் சாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

