தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் பழைய காமராஜர் நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிமென்ட் சால பணி

பாகூர் பழைய காமராஜர் நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிமென்ட் சால பணி

பாகூர் பழைய காமராஜர் நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிமென்ட் சால பணி


ADDED : செப் 08, 2026 03:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 03:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் பழைய காமராஜர் நகரில் கிடப்பில் உள்ள சிமென்ட் சாலை அமைக்கும் பணியால், பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

பாகூர் பழைய காமராஜர் நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், 18 லட்ச ரூபாய் செலவில், சிமென்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.  அதற்கான பணியினை, கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து வைத்து பணியை துவக்கி வைத்தார்.  அடுத்த சில வாரங்களில், அங்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்றது. 

முதற்கட்டமாக, சாலையோரம் இருந்த பள்ளங்கள் சரி செய்யப்பட்டு, அதன் மீது கம்பிகள் மூலமாக படல் வைத்து சிமெண்ட் கார்கிரீட் கலவை மூலமாக சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்னர், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது. அதற்காக, தயாரிக்கப்பட்ட இரும்பு படல்கள் மழையின் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்து வீனாகி வருகிறது.

தற்போது, சாலை கரடு முரடாக இருப்பதால், பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில் சாலை பணி அரைகுறையாக இருப்பதால், கழிவு நீர் செல்ல வழியின்றி வீடுகளின் வாசல்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அப்பகுதியில் கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ள நிலையில், அவ்வப்போது அப்பகுதியில் உள்ள மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பாகூர் பழைய காமராஜர் நகரில் கிடப்பில் உள்ள சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us