குடல் அழற்சி நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பு அவசியம்: ஜிப்மரில் கூட்டத்தில் அட்வஸ்
குடல் அழற்சி நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பு அவசியம்: ஜிப்மரில் கூட்டத்தில் அட்வஸ்
UPDATED : செப் 08, 2026 03:36 PM
ADDED : செப் 08, 2026 03:31 PM

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் குடல் அழற்சி நோயாளிகளுக்கான காலாண்டு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இரைப்பை குடலியல் துறைத் தலைவர் பழனிவேல் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை நிபுணர்கள் உரையாற்றினர்:கூடுதல் பேராசிரியர் செந்தமிழ்ச் செல்வன், நோயின் அறிகுறிகள், துாண்டும் காரணிகள் மற்றும் நவீன சிகிச்சைகள் குறித்து விளக்கினார்.
மருத்துவ உளவியலாளர் அறிவழகன், குடல்-மூளை தொடர்பு மற்றும் மன அழுத்தத்தை கையாளுதல் குறித்து விவரித்தார். உணவியல் நிபுணர் ரமா பிரபா, நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சிறப்பு அமர்வில்,கிரோன்ஸ் நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் போன்ற குடல் அழற்சி நோய்கள், ஒருவரின் உடல் நலம், ஊட்டச்சத்து மற்றும் மனநலத்தைப் பாதிக்கக்கூடியவை. இதற்கு நீண்டகால சிகிச்சையும் கண்காணிப்பும் தேவைப்படுவதால், முறையான விழிப்புணர்வும் வாழ்க்கைமுறை மாற்றங்களும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜிப்மர் மருத்துவ இரைப்பை குடலியல் துறை சார்பில் நடந்த இக்கூட்டத்தில், ஏராளமான நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்று விளக்கம் பெற்றனர்.
