/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரைவு பட்டியலை வெளியிட்டது சென்டாக்

ADDED : செப் 27, 2024 05:03 AM
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி, சென்டாக் வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ படிப்புகளுக்கு ஏற்கனவே முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சென்டாக் சீட் ஒதுக்கி இருந்தது. தற்போது, இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி, வரைவு முறையில் சீட்டுகளை ஒதுக்கியுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை, இரண்டு கவுன்சிலிங்கிலும் மாகியில் உள்ள ராஜிவ் காந்தி ஆயுர்வேத கல்லுாரியில் 37 மாணவர்களுக்கும், புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரியில் 42, மாகி பல் மருத்துவ கல்லுாரியில் 35, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் 35 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., படிப்பினை பொருத்தவரை இரண்டு கட்ட கவுன்சிலிங்கில் முடிவில் அரசு மருத்துவ கல்லுாரியில் 127, பிம்ஸ்-56, மணக்குள விநாயக 91, வெங்கடேஸ்வரா-90 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்ட பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
இதேபோல் நிர்வாக இடங்கள், சிறுபான்மையினர் இடங்கள், என்.ஆர்.ஐ., இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் சீட் கிடைத்தவர்களுக்கான வரைவு பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆட்சேபனைகள் இருந்தால் மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டு வாயிலாக தெரிவிக்கலாம்.