/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ படிப்பு 2ம் கட்ட கலந்தாய்வு விண்ணப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
/
மருத்துவ படிப்பு 2ம் கட்ட கலந்தாய்வு விண்ணப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
மருத்துவ படிப்பு 2ம் கட்ட கலந்தாய்வு விண்ணப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
மருத்துவ படிப்பு 2ம் கட்ட கலந்தாய்வு விண்ணப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
ADDED : ஆக 28, 2025 02:13 AM
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, 2ம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வை நடத்தியது.
அதன்படி முதற்கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் இடம் கிடைக்கப் பெற்றவர்களின் பட்டியல் மற்றும் மற்றும் அரசு, நிர்வாகம், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரம் சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் 2-ம் கட்ட கலந்தாய்வில் அரசு, நிர்வாகம் மற்றும் சிறுபான்மை பிரிவில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் வரும் 2ம் தேதி மாலை 5:௦௦ மணிக்குள் பதிவுக்கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களது சீட்டை ரத்து செய்ய விரும்பினால் வரும் 1ம் தேதி மாலை 5:௦௦ மணிக்குள் தங்களது டேஷ் போர்ட்டில் லாகின் செய்து தெரிவிக்கலாம்.
அரசு ஒதுக்கீட்டில் 2ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கும் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், மீனவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பதிவு கட்டணமாக ரூ.10 ஆயிரம், எஸ்.சி., பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் பதிவு கட்டணமாக செலுத்தி விருப்ப பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் பங்கேற்க விரும்பினால் ரூ. 2 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க முடியாது.
இந்த தகவலை சென்டாக ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.