/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் புயல் சேத விபரங்களை மத்திய குழு ஆய்வு: முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர்
/
புதுச்சேரியில் புயல் சேத விபரங்களை மத்திய குழு ஆய்வு: முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர்
புதுச்சேரியில் புயல் சேத விபரங்களை மத்திய குழு ஆய்வு: முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர்
புதுச்சேரியில் புயல் சேத விபரங்களை மத்திய குழு ஆய்வு: முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர்
ADDED : டிச 09, 2024 06:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி வந்த மத்திய குழுவினர் பெஞ்சல் புயல் வெள்ள சேதங்களை ஆய்வு செய்தனர்.
பெஞ்சல் புயல் ஒட்டுமொத்த புதுச்சேரியை புரட்டி போட்டது. ஒரே நாளில் கொட்டி தீர்த்த 50 செ.மீ., கன மழையால் பல அடி உயரத்திற்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மின் சாதன பொருட்கள், உடமைகள் அனைத்தும் சேதமாகின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
சாத்தனுார், வீடூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், சங்கராபரணி, தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பொருக்கு ஏற்பட்டு, கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. விவசாய நிலங்கள் பாழானாது. புயல் மழையில் 5 பேர் உயிரிழந்தனர்.
9,981 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின. புதுச்சேரி அரசு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 5,000 நிவாரணம், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் அறிவித்தது.
புதுச்சேரி பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ. 600 கோடி நிவாரணம் கோரி புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. இந்நிலையில் புயல் சேதங்களை பார்வையிட மத்திய இணை செயலர் ராஜேஷ்குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நேற்று மாலை 3:00 மணிக்கு புதுச்சேரி வந்தது. முதலில் பாகூர் துணை மின் நிலையத்திற்கு சென்ற மத்தியக் குழு, அங்கு கனமழையினால் ஏற்பட்ட சேத விபரங்களை ஆய்வு செய்தனர். பின், அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒரு குழு பாகூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கும், மற்றொரு குழு புதுச்சேரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் சென்று சேத விபரங்களை ஆய்வு செய்தது. ராஜேஷ்குப்தா, சோனமணிஹாபம், தனபாலம் குமரன், ராகுல் பஹேட்டி தலைமை யில் ஒரு குழுவினர் புதுச்சேரி தாலுகாவிற்கு உட்பட்ட டி.என்.பாளையம் இருளர் குடியிருப்பு, மலட்டாறு பாலம் மற்றும் இடையார்பாளையம் பாலத்தில் ஏற்பட்ட சேதம், என்.ஆர். நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள், நோணாங்குப்பம் ஆற்றுப்பகுதியை ஆய்வு செய்தனர்.
பின், மரப்பாலம் துணை மின் நிலையம், தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம், உப்பனாறு வாய்க்கால், ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலையம், வைத்திக்குப்பம் கடற்கரை பகுதி சேத விபரங்களை ஆய்வு செய்தனர்.
பொன்னுசாமி, சரவணன், பாலாஜி ஆகியார் மற்றொரு குழுவாக பிரிந்து பாகூர் தாலுகாவிற்கு உட்பட்ட முள்ளோடை, கொமந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளன்சந்தை, சித்தேரி, கரையாம்புத்துார், பனையடிக்குப்பம் பகுதிகளை பார்வையிட்டு புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். மதியம் 3:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை ஆய்வு நடந்தது.
வெள்ள சேத விபரங்களை கலெக்டர் குலோத்துங்கன், சப்கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கோட்டாரு உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கினர்.
முதல் நாள் ஆய்வை முடித்த மத்திய குழுவினர், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை நடத்தினர். அப்போது, மத்திய குழுவினரிடம் சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். சேத விபரங்கள் மற்றும் புனரமைப்பு, நிவாரண பணி, தேவைப்படும் நிதி குறித்தும் எடுத்து கூறப்பட்டது. இக்கூட்டத்தில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், தலைமை செயலர் சரத்சவுக்கான் பங்கேற்றனர்.