/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி
/
ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி
ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி
ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி
ADDED : அக் 31, 2024 05:53 AM
புதுச்சேரி, : ரேஷன் கடை இலவச அரிசியை புதுச்சேரி அரசின் சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மீண்டும் திறந்து, இலவச அரிசி குடிமை பொருள் வழங்கல் துறை வாயிலாக வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதை, தொடர்ந்து வரும் 15ம் முதல் இலவச அரிசி ரேஷன் கடைகளில் மீண்டும் வழங்கப்பட்ட உள்ளது.இதற்கிடையில், மீண்டும் ரேஷன் கடை இலவச அரிசி விவகாரத்தில் நான்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது:
நேரடி பலன் பரிமாற்றம் என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு பெரிய சீர்திருத்த முயற்சி. எனவே நேரடி பணம் பரிமாற்ற திட்டத்திற்கு பதிலாக தனிப்பட்ட பயனாளிகள் திட்டத்தினை(இலவச அரிசி) செயல்படுத்தும்போது பயோமெட்ரிக் அங்கீகாரத்தை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும்.இரண்டாவதாக இந்த திட்டத்தை செயல்படுத்த எந்தவொரு திட்ட அமலாக்க முகமையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், அது புதுச்சேரி அரசால் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.மூன்றாவதாக உணவு தானியங்களை விநியோகிப்பதில் எந்தவிதமான திருட்டுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், உணவு தானியங்களின் தரத்தை உறுதிப்படுத்தவும் புதுச்சேரி அரசாங்கத்தால் ஒரு வலுவான அமைப்பு நிறுவப்பட வேண்டும்.
நான்காவதாக இந்த திட்டத்தின் நிதி தாக்கங்கள் புதுச்சேரி அரசின் நிதி ஆதார நிதியிலிருந்து ஏற்கப்பட வேண்டும். இதனை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

