/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நம்பிக்கை அளிக்கும் துாய்மை நகரம்' உழவர்கரை நகராட்சிக்கு மத்திய அரசு விருது

ADDED : ஜூலை 22, 2025 07:58 AM

புதுச்சேரி : டில்லியில் நடந்த விழாவில், உழவர்கரை நகராட்சிக்கு 'நம்பிக்கை அளிக்கும் துாய்மை நகரம்' என்ற பிரிவில், மத்திய அரசு விருது வழங்கி பாராட்டி உள்ளது.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் ஸ்வச்ச் ஸர்வேக்ஷன் 2024--25 விருது வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் டில்லியில் நடந்தது. இந்த விழாவில், துாய்மை மதிப்பீட்டின் 9வது பதிப்பாக, நாடு முழுவதும் உள்ள நகரங்களை மதிப்பீடு செய்து, முன்னோடியான நகரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அதில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் நம்பிக்கை அளிக்கும் தூய்மை நகரம் என்ற பிரிவில், உழவர்கரை நகராட்சி தேர்வு செய்யப்பட்டு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் விருது வழங்கினார். இந்த விருதினை, உள்ளாட்சி துறை செயலர் கேசவன், இயக்குநர் சக்திவேல், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விருதுடன் புதுச்சேரி திரும்பிய அவர்கள், முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து, தாங்கள் பெற்ற விருது மற்றும் சான்றிதழினைக் காண்பித்து வாழ்த்து பெற்றனர். பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ., உடனிருந்தார்.