தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய அரசின் பட்ஜெட் :விவசாயிகளுக்கு ஏமாற்றம்

 மத்திய அரசின் பட்ஜெட் :விவசாயிகளுக்கு ஏமாற்றம்

 மத்திய அரசின் பட்ஜெட் :விவசாயிகளுக்கு ஏமாற்றம்


ADDED : பிப் 03, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் டாவே உள்ளது என புதுச்சேரி விவசாயிகள் சங்கத் தலைவர் கீதநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

ஒன்றிய பா.ஜ., அரசின் பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நதிநீர் இணைக்கப்படும், இந்தியா முழுதும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்திற்கான நீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், உரத்திற்கு மானியம் அதிகரிக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் வேளாண் துறையை அபிவிருத்தி செய்யவோ, விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களோ எதுவும் இல்லை. விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் இயற்றப்படவில்லை. கடந்த ஆண்டை போலவே விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே இந்தாண்டு பட்ஜெட்டும் அமைந்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us