/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனமழையில் புதுச்சேரிக்கு அதிக பாதிப்பு இருநாள் ஆய்வு செய்த மத்திய குழு தகவல்

ADDED : டிச 10, 2024 06:49 AM
புதுச்சேரி: புயல், மழை மற்றும் வெள்ளத்தால் புதுச்சேரியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய குழு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை கடந்த இரு தினங்களாக பார்வையிட்ட மத்திய குழுவினர் நேற்று மதியம், அக்கார்டு ஓட்டலில் ,வெள்ள சேதங்களை விளக்கும் வகையில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலர் சரத்சவுகான், அரசு செயலர்கள் மோரே, பங்கஜ்குமார், கேசவன், முத்தம்மா, நெடுஞ்செழியன், கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் அரசு துறை இயக்குனர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 60 பட காட்சிகள் மூலம் வெள்ள சேதங்களை மத்தியக்குழுவினருக்கு அதிகாரிகள் விளக்கினர். சில படங்களுக்கு மத்திய குழுவினர் விளக்கம் கேட்டனர். அதிகாரிகள் அதற்கு விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து மத்திய குழுவில் இடம் பெற்ற வேளாண் அதிகாரி பாலாஜி பேசுகையில், புதுச்சேரியில் புயல், மழை மற்றும் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு விரைவில் வழங்கப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு மத்தியக்குழுவினர், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.