/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மண்ணாடிப்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர் அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதம்
/
மண்ணாடிப்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர் அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதம்
மண்ணாடிப்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர் அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதம்
மண்ணாடிப்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர் அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதம்
ADDED : டிச 10, 2024 06:48 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் அமைச்சர் நமச்சிவாயத்துடன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று முன்தினம் முதல் இரு பிரிவுகளாக ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, வேளாண் அதிகாரிகள் பொன்னுசாமி, பாலாஜி சோனமணிஹாபம் தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று காலை மண்ணாடிப்பட்டு தொகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக, மத்திய குழுவினரை அமைச்சர் நமச்சிவாயம் காட்டேரிக்குப்பத்தில் வரவேற்றார். சுத்துக்கேணி பகுதியில் ஏரி நிரம்பி தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள், உளுந்து, வேர்க்கடலை, சவுக்கை, வாழை உள்ளிட்ட நிலங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் விவசாயிகளிடம் பாதிப்புகளின் விவரங்களை கேட்டறிந்தனர்.
பின்னர், சந்தை புதுக்குப்பம் காலனியில் மழைநீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டபோது, அமைச்சர் நமச்சிவாயம் மழை பாதிப்புகள் குறித்து மத்திய குழுவிடம் விளக்கினார். அப்போது, வீட்டில் வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பெண், உரிய நிவாரணம் வழங்குமாறு கண்ணீர் மல்க, மத்திய குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.
மத்தியக்குழுவினர் ஒரு வீட்டை மட்டும் பார்வையிட்டுவிட்டு, புறப்பட்டதை கண்டு, ஆத்திரமடைந்த கிராம மக்கள், தண்ணீர் புகுந்ததில் இங்குள்ள அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டை மட்டும் பார்த்துவிட்டு எவ்வாறு நிவாரணம் வழங்க முடியும் எனக் கூறி, மத்திய குழுவுடன் வந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு நிலவியது.
கொடாத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற மத்திய குழுவினர், சேதமடைந்த சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் புகுந்த பகுதிகளை பார்வையிட்டனர். செட்டிப்பட்டில் புயல் மழையால் கீழே விழுந்த டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் கம்பங்களை பார்வையிட்டு, அவற்றின் சேதமதிப்புகளை மின்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, வாதானுார் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையி ட்டனர்.
ஆய்வின்போது, சப் கலெக்டர் சோமசேகர அப்பா ராவ் கோட்டாறு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், வேளாண் இயக்குனர் வசந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.