/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்
/
கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்
ADDED : பிப் 20, 2025 06:29 AM

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சானறிதழ் வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கராத்தே பயிற்சி முடித்த 8ம் வகுப்பு மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கி, பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் அறிவழகி முன்னிலை வகித்தார். ஆசிரியர் லட்சுமி பிரியா வரவேற்றார். முன்னதாக பயிற்சி முடித்த மாணவிகளின் சாகச நிகழ்ச்சி நடந்தது.
கராத்தே மாஸ்டர் லக்னகுமாரன் நன்றி கூறினார்.

