/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீச்சல் பயிற்சி வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
/
நீச்சல் பயிற்சி வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
நீச்சல் பயிற்சி வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
நீச்சல் பயிற்சி வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : அக் 26, 2024 06:25 AM

புதுச்சேரி: நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய நீச்சல் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி நீச்சல், டைவிங் மற்றும் வாட்டர்போலோ அசோசியேசன் மூலம் 'உலக அக்வாட்டிக் நீர் சார்ந்த கல்வி நிகழ்வு'புதுச்சேரி நீச்சல் மையத்தில் கடந்த மாதம் 29ம் தேதி துவங்கி நாளை 27ம் தேதி வரை நடக்கிறது.
இத்திட்டத்தின் டைவிங் மற்றும் வாட்டர்போலோ அசோசியேஷன் தலைவர் ஆதித்யா கல்விக் குழும நிறுவனர் ஆனந்தன், செயலாளர் டாம் ஜாய் தோப்பன் பங்கேற்றனர். ஒரு மாதம் நடந்த இலவச பயிற்சிக்கு நாடு முழுவதுதிலும் இருந்து 30 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இப்பயிற்சி அகில இந்திய அளவில் முதல் முறையாக புதுச்சேரியில் நடந்தது.
இதில், 2 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீச்சல் கூட்டமைப்பு பொது செயலாளர் சுந்தரேஷ், மோனல் ஜாக்சி, நீச்சல் சங்க பயிற்றுவிப்பாளர் சில்க் மோக் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
புதுச்சேரி நீச்சல் மையத்தில் நடந்த நிறைவு விழாவில், ஜெர்மன் பயிற்சியாளர் சில்க் மோக், டைவிங் மற்றும் வாட்டர்போலோ அசோசியேஷன் தலைவர் , ஆதித்யா கல்விக்குழுமத்தின் நிறுவனர் ஆனந்தன், பிரதீப் குமார், செயலாளர் டாம் ஜாய் தோப்பன், ஜாய் ஜோசப் தோப்பன், என்.எல்.சி., பயிற்சியாளர் சாஜி செபாஸ்டியன் ஆகியோர் நீச்சல் பயிற்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
ஏற்பாடுகளை புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த் செய்திருந்தார்.