sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4ம் தேதி எஸ்.ஐ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

 4ம் தேதி எஸ்.ஐ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

 4ம் தேதி எஸ்.ஐ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு


ADDED : பிப் 25, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 4ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 22ம் தேதி நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு வெளியான மற்றொரு அறிவிப்பில், சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி ஆலோசனை கூடத்தில் வரும் 4ம் தேதி காலை 8:30 மணி முதல் நடக்கிறது.

தேர்வானவர்கள் தங்களின் பிறப்பு, கல்வி, குடியிருப்பு, சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் அசலை எடுத்து வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு https://police.py.gov.in இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பத்தாரர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 27ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us