/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணிடம் செயின் பறிப்பு : பட்டப்பகலில் துணிகரம்
/
பெண்ணிடம் செயின் பறிப்பு : பட்டப்பகலில் துணிகரம்
பெண்ணிடம் செயின் பறிப்பு : பட்டப்பகலில் துணிகரம்
பெண்ணிடம் செயின் பறிப்பு : பட்டப்பகலில் துணிகரம்
ADDED : டிச 08, 2025 04:47 AM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை தனியார் கம்பெனிக்கு நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயினை பறிந்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, ஆலங்குப்பம், அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயந்தி, 50. இவர், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 9:30 மணிக்கு வழக்கம் போல், தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் இருந்து கீழே இறங்கிய ஜெயந்தி, கம்பெனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு பின்னால், பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
தகவலறிந்த டி.நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஜெயந்தி புகாரின் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க செயினை பறித்து சென்ற சம்பவம் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

